Sunday, October 30, 2011

கருவின் குரல்


உன்னுள்ளே 
கருவாகி உருவாகி நீந்தத் தொடக்கி உள்ளேன்!  
நம்மை  பார்க்கும் ஆர்வம்
நம்மிடையே நாளுக்கு நாள் வளர்கிறது 
என்னைப் போல்!

நான் உறங்க நீ உறங்காமல் என்னைத்  தடவிக்  கொடுக்கிறாய் 
உன் உள்ளங்கையின் சூட்டிற்காக  
நான் உறங்காமல் விழித்திருக்கிறேன்! 

படிகள் இறங்கும் போதும்! 
கிணற்றில் தண்ணீர் எடுக்கும் போதும்! 
உன் கால்கள் நோக நீ அமரும்  போது 
உன் கால்களை பிடித்து விட
என் கைகள் துடிக்குதே!
  
நான் உன்னை உதைக்கிறேன் என்று 
அப்பாவிடம் சொல்லி சந்தோஷப்படிக்கிறாய் 
நான் உதைக்கவில்லை
உன்னைத் தொட்டுப் பார்க்கிறேன்!

எனக்காக நீயும் உனக்காக நானும் 
பிராத்திக்கிறோம் 
இரு வேறு பிராத்தனைகள்
கண்ணுக்கு தெரியாத கடவுளிடம் 
போய் சேருகிறது நமக்காக!

தினமும் நீயும் நானும் 
பேசிக் கொள்கிறோம் நமக்கு தெரியாமல்!

என்னைப் பற்றிய  கனவுகள் உன்னிடம் அதிகம்  
அது காலை சூரியனுடம் தொடாங்கி இரவு நிலவு வரை 
நாளும் நீள்கிறது!
உன் உணவு ரத்தம் உணர்வு இவைகளுடன் 
உன் கனவையும் உள் வாங்கிக் கொள்கிறேன்!
   
உன்னை நான் பார்க்கப் போகும் நாள் வந்து விட்டது
நம்மைச் சுற்றி முகமூடி மனிதர்கள்!
இரு கைகள் உன்னையும் என்னையும் பிரிக்கிறது
உலகின் வாசலில் இருக்கிறேன் 
பயமாக இருக்கிறது! 
என்னால் ன்னை பார்க்கமுடியவில்லை 
ஆனால் உன் அழுகுரல் கேக்கிறது
எதோ ஒரு குரல் சொல்கிறது
நான் பிறக்காமல் இறந்து விட்டேனாம் !
அதற்கு தெரியபோவதில்லை 
நாம் பேசியதும் சிரித்ததும் தூங்கியதும்!

என்னை தாங்கும் கைகளிடம் 
மன்றாடுகிறேன் 
என்னை என் அம்மாவின் கருப்பையில்
விட்டுவிடுங்கள்
நீந்தி உயிர்  பிழைத்துக் கொள்கிறேன்!    

No comments:

Post a Comment