இத பத்தி இந்திய முழுவதும் அனைத்து தொலைகாட்சிளையும் விவாதிசிட்டாங்க என் பார்லிமென்ட்லையும் விவாதம் நடந்துடுச்சி. ஒரு நிமுசம் aishwarya rai யோட கொழந்தைய பத்தி இல்ல, "முல்லை பெரியாறு அணை", அது என்னபா முல்லை பெரியாறு அணை? அதுக்கு நாம் சுமார் 212 வருசம் பின்னாடி போகணும் அந்த flash back வேண்டாம். பிரச்சனை இதான் : "152 அடில தண்ணீர் தேக்குன கேரளா மக்களுக்கு ஆபத்து" ஒரு பத்திரிக்கை போட்ட போடுல கேரளா அரசாங்கம் ஆடி போனது, (நம்ம தமிழ் நாடு போல இல்ல, கேரளாவுல எழுத்துக்கும், பத்திரிகைக்கும், இலக்கியத்துக்கும் அதிக மரியாதை உண்டு)
அப்பறம் என்ன பாஞ்சாயது ஒன்னு கூடி அணைய வலுபடுத்த முடிவு செஞ்சுது அணையின் கொள்ளவை 136 அடியாக குறைக்கப்பட்டது, அணைய வலுப்படுதன பிறகும் கேரள அரசு "கொத்தனார் சரி இல்ல மொக்க மேஸ்திரி அணை உடைஞ்சிடும்" அப்படி இப்படினு கூச்சல் போட்டுது. சுப்ரீம் கோர்ட்க்கு போனா, நம்ம டெல்லி நாட்டாம "அடிச்சிகாதிங்கப்பா குத்து மதிப்பா அணையோட கொள்ளளவ 142 வச்சிக்க" தீர்ப்பு சொன்னது . கேரளா எதையும் காதுல வாங்கல "முடியவே முடியாதுன்னு" முட்டு கட்டைப் போடுது. இதனால தமிழ் நாட்டுல உள்ள பல மாவட்டங்களின் விவசாயமும் தண்ணீர் பிரச்னையும் கேள்வி குறி ஆகி உள்ளது.
இப்படி அடிச்சிட்டு இருக்குற நேரத்துல இந்த ஆளு(Sohan Roy) 3D ல Dam 999 ஒரு படத்த எடுத்துட்டு வந்து இருக்கார் . ஒரு Dam அது உடஞ்சி, அதனால கேரளாவுக்கு வர இழப்புகள் இதான் படத்தோட கரு, படம் சவுத் இந்தியால(கேரளா) நடக்குது ஆனா எல்லா கதா பாத்திரங்களும் இங்கிலீஷ் பேசி நடிக்குது, கேட்டா ஹாலிவுட் படம்னு சொல்லுவாரு, இதுல என்ன கொடுமன்னா? பாடல்கள் எல்லாம் ஹிந்தில, முடியல பா!!!! ஆயுர்வேத பத்தி விரிவா சொல்லி இருக்காங்கலாம் படத்துல ஹம்ம்!!! வினய், ஆசிஷ் வித்யார்த்தி, விமலா ராமன்னு நமக்கு தெரிஞ்ச முகம் கொஞ்சம் இருக்கு. எது எப்படியோ இந்த படத்த நம்ம தமிழ் நாட்டுல பார்க்க முடியாது. நம்ம முதல்வர் "ஏற்கனவே நமக்கும் அவங்களுக்கும் வாய்கா தகராறு இதுல இது வேறனு" தடை பண்ணிடாங்க. எப்படியாவது இந்த Damn மூவிய sorry Dam மூவிய பார்த்துடுனும், யாராவது பார்த்தா விமர்சனம் எழுதுங்க.
அப்பறம் என்ன பாஞ்சாயது ஒன்னு கூடி அணைய வலுபடுத்த முடிவு செஞ்சுது அணையின் கொள்ளவை 136 அடியாக குறைக்கப்பட்டது, அணைய வலுப்படுதன பிறகும் கேரள அரசு "கொத்தனார் சரி இல்ல மொக்க மேஸ்திரி அணை உடைஞ்சிடும்" அப்படி இப்படினு கூச்சல் போட்டுது. சுப்ரீம் கோர்ட்க்கு போனா, நம்ம டெல்லி நாட்டாம "அடிச்சிகாதிங்கப்பா குத்து மதிப்பா அணையோட கொள்ளளவ 142 வச்சிக்க" தீர்ப்பு சொன்னது . கேரளா எதையும் காதுல வாங்கல "முடியவே முடியாதுன்னு" முட்டு கட்டைப் போடுது. இதனால தமிழ் நாட்டுல உள்ள பல மாவட்டங்களின் விவசாயமும் தண்ணீர் பிரச்னையும் கேள்வி குறி ஆகி உள்ளது.
குறிப்பு : நம்ம ஆளு ஒரு ஹாலிவுட் படம் எடுத்தது நாம் பெருமை படக் கூடிய விசயமே. அவர் உழைப்புக்கு நன்றி.
சரி நம்ப போய் "Why this kolaveri" கேட்போம். அப்படியே இந்த பாட்ட கேரளா அரசுக்கும் Sohan Roy க்கும் dedicate பண்ணுவோம்.

No comments:
Post a Comment