Thursday, November 24, 2011

Dam(n) movie

இத பத்தி இந்திய முழுவதும் அனைத்து தொலைகாட்சிளையும் விவாதிசிட்டாங்க என் பார்லிமென்ட்லையும் விவாதம் நடந்துடுச்சி.  ஒரு நிமுசம் aishwarya  rai  யோட கொழந்தைய பத்தி இல்ல, "முல்லை பெரியாறு அணை", அது என்னபா முல்லை பெரியாறு அணை? அதுக்கு நாம் சுமார் 212  வருசம் பின்னாடி போகணும் அந்த flash back வேண்டாம். பிரச்சனை இதான் : "152 அடில தண்ணீர் தேக்குன கேரளா மக்களுக்கு ஆபத்து" ஒரு பத்திரிக்கை போட்ட போடுல கேரளா அரசாங்கம் ஆடி போனது, (நம்ம தமிழ் நாடு போல இல்ல, கேரளாவுல எழுத்துக்கும், பத்திரிகைக்கும், இலக்கியத்துக்கும் அதிக மரியாதை உண்டு)


 அப்பறம் என்ன பாஞ்சாயது ஒன்னு கூடி அணைய வலுபடுத்த முடிவு செஞ்சுது அணையின் கொள்ளவை 136  அடியாக குறைக்கப்பட்டது, அணைய வலுப்படுதன பிறகும் கேரள அரசு "கொத்தனார் சரி இல்ல மொக்க மேஸ்திரி அணை உடைஞ்சிடும்" அப்படி இப்படினு கூச்சல் போட்டுது. சுப்ரீம் கோர்ட்க்கு போனா, நம்ம டெல்லி நாட்டாம "அடிச்சிகாதிங்கப்பா குத்து மதிப்பா அணையோட கொள்ளளவ 142  வச்சிக்க" தீர்ப்பு சொன்னது . கேரளா எதையும் காதுல வாங்கல "முடியவே முடியாதுன்னு" முட்டு கட்டைப் போடுது. இதனால தமிழ் நாட்டுல உள்ள பல மாவட்டங்களின் விவசாயமும் தண்ணீர் பிரச்னையும் கேள்வி குறி ஆகி உள்ளது. 



இப்படி அடிச்சிட்டு இருக்குற நேரத்துல இந்த ஆளு(Sohan Roy) 3D ல Dam 999 ஒரு படத்த எடுத்துட்டு வந்து இருக்கார் . ஒரு Dam அது உடஞ்சி, அதனால கேரளாவுக்கு  வர இழப்புகள் இதான் படத்தோட கரு, படம் சவுத் இந்தியால(கேரளா) நடக்குது ஆனா எல்லா கதா பாத்திரங்களும் இங்கிலீஷ் பேசி நடிக்குது, கேட்டா ஹாலிவுட் படம்னு சொல்லுவாரு,   இதுல என்ன கொடுமன்னா? பாடல்கள் எல்லாம் ஹிந்தில, முடியல பா!!!! ஆயுர்வேத பத்தி விரிவா சொல்லி இருக்காங்கலாம் படத்துல ஹம்ம்!!! வினய், ஆசிஷ் வித்யார்த்தி, விமலா ராமன்னு நமக்கு தெரிஞ்ச முகம் கொஞ்சம் இருக்கு. எது எப்படியோ இந்த படத்த நம்ம தமிழ் நாட்டுல பார்க்க முடியாது. நம்ம முதல்வர் "ஏற்கனவே நமக்கும் அவங்களுக்கும் வாய்கா தகராறு இதுல இது வேறனு" தடை பண்ணிடாங்க. எப்படியாவது இந்த Damn மூவிய sorry Dam மூவிய பார்த்துடுனும், யாராவது பார்த்தா விமர்சனம் எழுதுங்க.

குறிப்பு :  நம்ம ஆளு ஒரு ஹாலிவுட் படம் எடுத்தது நாம் பெருமை படக் கூடிய விசயமே. அவர் உழைப்புக்கு நன்றி.

சரி நம்ப போய் "Why this kolaveri" கேட்போம்.  அப்படியே இந்த பாட்ட கேரளா அரசுக்கும் Sohan  Roy க்கும் dedicate பண்ணுவோம்.                       
       

Sunday, October 30, 2011

கருவின் குரல்


உன்னுள்ளே 
கருவாகி உருவாகி நீந்தத் தொடக்கி உள்ளேன்!  
நம்மை  பார்க்கும் ஆர்வம்
நம்மிடையே நாளுக்கு நாள் வளர்கிறது 
என்னைப் போல்!

நான் உறங்க நீ உறங்காமல் என்னைத்  தடவிக்  கொடுக்கிறாய் 
உன் உள்ளங்கையின் சூட்டிற்காக  
நான் உறங்காமல் விழித்திருக்கிறேன்! 

படிகள் இறங்கும் போதும்! 
கிணற்றில் தண்ணீர் எடுக்கும் போதும்! 
உன் கால்கள் நோக நீ அமரும்  போது 
உன் கால்களை பிடித்து விட
என் கைகள் துடிக்குதே!
  
நான் உன்னை உதைக்கிறேன் என்று 
அப்பாவிடம் சொல்லி சந்தோஷப்படிக்கிறாய் 
நான் உதைக்கவில்லை
உன்னைத் தொட்டுப் பார்க்கிறேன்!

எனக்காக நீயும் உனக்காக நானும் 
பிராத்திக்கிறோம் 
இரு வேறு பிராத்தனைகள்
கண்ணுக்கு தெரியாத கடவுளிடம் 
போய் சேருகிறது நமக்காக!

தினமும் நீயும் நானும் 
பேசிக் கொள்கிறோம் நமக்கு தெரியாமல்!

என்னைப் பற்றிய  கனவுகள் உன்னிடம் அதிகம்  
அது காலை சூரியனுடம் தொடாங்கி இரவு நிலவு வரை 
நாளும் நீள்கிறது!
உன் உணவு ரத்தம் உணர்வு இவைகளுடன் 
உன் கனவையும் உள் வாங்கிக் கொள்கிறேன்!
   
உன்னை நான் பார்க்கப் போகும் நாள் வந்து விட்டது
நம்மைச் சுற்றி முகமூடி மனிதர்கள்!
இரு கைகள் உன்னையும் என்னையும் பிரிக்கிறது
உலகின் வாசலில் இருக்கிறேன் 
பயமாக இருக்கிறது! 
என்னால் ன்னை பார்க்கமுடியவில்லை 
ஆனால் உன் அழுகுரல் கேக்கிறது
எதோ ஒரு குரல் சொல்கிறது
நான் பிறக்காமல் இறந்து விட்டேனாம் !
அதற்கு தெரியபோவதில்லை 
நாம் பேசியதும் சிரித்ததும் தூங்கியதும்!

என்னை தாங்கும் கைகளிடம் 
மன்றாடுகிறேன் 
என்னை என் அம்மாவின் கருப்பையில்
விட்டுவிடுங்கள்
நீந்தி உயிர்  பிழைத்துக் கொள்கிறேன்!    

Monday, October 10, 2011

நிழல் உலகம்

அது ஒரு நிஜங்கள்
பொய்யாய் போன நிழல்களின் உலகம்!

வெள்ளை வெளிச்சத்திற்கு நடுவே
ஓவியமாய் நடமாடும் நிழல்கள்!
சில மிருக நிழல் மனிதன் போல!
பல மனித நிழல் மிருகம் போல!

அங்கு
பச்சை மஞ்சள் சிகப்பு
எல்லாம் கருப்பாக
வண்ண வேற்றுமை இல்லை!

நிழல்கள் பேசுவதில்லை
நடமாடுகிறது! நடனமாடுகிறது!
மொழி வேற்றுமை இல்லை!

நிழல் காட்டும் வேற்றுமை ஒன்று தான்
ஆண் பால்! பெண் பால்!
திருநங்கையை
பெண்பாலாய் காட்டிய நிழல்
நிஜத்தை வெல்கிறது!

நிழல் உலகம் அது நிஜ உலகம்!
அங்கு
பிச்சைகாரன் நிழல்
அட்சய பாத்திரம் ஏந்துது!
பிச்சை போடுபவன் நிழல்
அதை யாசிக்கிறது!

பணம் எரிந்த சாம்பலாக!
வைரம் மீண்டும் நிலக்கரியாக!

பாபர் ராமர்
நிழல்களில் வேற்றுமையில்லை!
கண்டி முருகன் நிழலை
புத்தர் நிழல் மறைக்கவில்லை!

நிழல்கள் தொப்புள்கள் காட்டுவதில்லை!
தொடைகள் தெரிய ஜீன்ஸ் அணிவதில்லை!
காதல் கொள்ளும் அவைகளுக்கு தேக பசியில்லை!

பொய் பொறாமை கோபம் துரோகம் வெறுப்பு வஞ்சனை
இவைகளை அது அறியவில்லை!
நிழல் சிரிக்கிறது நட்பு பழகுது பகல் முழுவதும் உழைக்கிறது
இரவில் உலகமே நிழலாகிறது!

அங்கு என் நிழல் மட்டும்
அங்கும் இங்கும் அலைகிறது!
நிழல்களை தேடி ஓடுகிறது!
எல்லா நிழல்களிலும் தேடுகிறது!
உன் வண்ணத்தை!


Thursday, March 10, 2011

அந்த நாலு எழுத்து வார்த்தை


பலத் தடவ யோசிச்சி பார்த்துட்டேன் இந்த வார்த்தையை படங்கள்ல/நடைமுறைகள்ல எப்படி?/எதற்காக? பயன்படுதுராங்கனு. ஆனா என்னால கண்டு பிடிக்க முடியல, அதாங்க "f"ல ஆரம்பிச்சி "K"ல முடியுமே அந்த வார்த்தை தான். எனக்கு இந்த வார்த்தை கேட்டாலே பிடிக்காது. HBO, Star Movies சேனல்ல இந்த வார்த்தை வந்தாலே ****னு subtitleல போட்டுடுவான், அத பார்க்கும் போது என் நண்பன்,
" நாலு ஸ்டார் கொடுத்து இருக்காங்க Inception படத்துக்கும் இந்த வார்த்தைக்கும் ஒரே ரேட்டிங் உனக்கு மட்டும் தான் பிடிக்க மாட்டுது"என்பான் .
 இப்போ என் நண்பன் பத்தி சொல்லியே ஆகணும் அவன் இந்த வார்த்தையை ஒரு நாளைக்கு பலத் தடவ யூஸ் பண்ணிடுவான். இந்திய-பாகிஸ்தான் மேட்ச்ல இந்திய ஜெயித்துதுனா "f**k", அதுவே பாகிஸ்தான் ஜெயித்தாலும் "f**k", என்ன திட்டும் போது இந்த வார்த்தைய சொல்லித்தான் திட்டுவான். அவனோட படத்துக்குப் போன அவ்வளவுதான்.
"f**k….. என்ன மியூசிக் போட்டு இருக்கான்? போன படத்தலையும் இத தான் போட்டு இருந்தான்"               
"f**K …..தமிழ்ல இங்கிலீஷ் படம் எடுக்குறாங்க?அதுக்கு அந்த இங்கிலீஷ் படத்த தமிழுல டப் பண்ணி ரிலீஸ் பண்ணி இருக்கலாம்"   
"என்ன டயலாக் இது? காதல்னா பூ மாதிரி செடி மாதிரி எக்ஸாம் மாதிரி --- மாதிரி --- மாதிரி --- மாதிரி, f**K"
"மச்சான் காதல்னா என்னடா?"இது நான். 
"f**K"
கடவுள்னா என்னானு கேட்டாக் கூட இதே பதில் தான் சொல்லி இருப்பான்....      
படம் முடிஞ்சி வரும்போது எனக்கு இந்த டயலாக் மட்டும் தான் ஞாயபகம் இருக்கும்.
f**K ,f**K , f**K , f**K ,f**K ,f**K
          
என்றோ ஒரு நாள்...
"மச்சான் உனக்கு இந்த வார்த்தையை எப்படி யூஸ் பண்ணனும்னு தெரியல, வா இப்படி", ஏதோ சென்சார் செய்யபடாத சில ஆங்கில படங்களை சிடி இல் ஓட விட்டான், படங்களில் அந்த வார்த்தை மிக தெளிவாக காதில் விழுந்தது, இன்னும் சொல்லப் போனால் படத்தில் வரும் டயலாக் முழுவதும் அந்த வார்த்தையாகவே இருந்தது. என்ன படம்? என்று கேக்காதீர்கள் சரியாக ஞாயபகம் இல்லை, பெரும்பாலும் அமெரிக்கர்கள் படம் இப்படித்தான் இருக்கிறது, அந்த படத்தின் வசனகர்த்தா லெட்டர் பேட் முழுவதும் இப்படி தான் இருந்து இருக்கும்... 
f**K ,f**K , f**K , f**K ,f**K ,f**K …….         
 படம் முடிந்த பிறகு அந்த வார்த்தையை எங்கு யூஸ் பண்ணுவது? என்பதில் மிகவும் குழப்பமாக இருந்தது. அந்த படத்துல அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், பக்கத்துக்கு வீட்டு பையன், நாய், பூனை, எலி என அனைத்தும் இந்த வார்த்தையைக் கொண்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருந்தன.
ஷேர் ஆட்டோகாரன் தாறுமாறாக ஓட்டினால், பிச்சைக்காரன் பிச்சைக் கேட்டால், சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரி நாவலை யாராவது தப்பாக பேசினால், சர்தார்ஜி ஜோக் சொன்னால், நான் வைக்கும் சாம்பாரில் உப்பு அதிகமாக இருந்தால், தமிழைக் கிண்டல் செய்தால் (பின் குறிப்பு: தமிழ் என்பது அவனுடைய கேர்ள் பிரண்ட்), சந்தோசம் வந்தால் , ஜலதோஷம் வந்தால் சொல்லப்போனால் எப்போதுமே...
f**K ,f**K , f**K , f**K ,f**K ,f**K
சில சமயம் இவன் தான் இந்த வார்த்தையை கண்டு பிடித்து இருப்பானோ? என சந்தேகம் வரும். 

இன்று.....  
"டேய்! இந்த வார்த்தையோட அர்த்ததுக்கும் அது யூஸ் பண்ற இடத்துக்கும் சம்பந்தமே இல்லையே?" நான்.
"சில வார்த்தைகளின் அர்த்தத்தை ஆராயக்கூடாது அப்படியே விட்டுடுனும் சுருக்கமா சொல்லனும்னா ஆராயக்கூடாது அனுபவிக்கணும், நான் இத ஒரு ஸ்டைலுகாக தான் யூஸ் பண்றேன், அதெல்லாம் சொன்ன புரியாது அனுபவத்துல வரணும். நீ ஒன்னு பண்ணு இன்னிக்கு இந்த வார்த்தைய யூஸ் பண்ணு அப்பறம் உனக்கே புரியும்” என் நண்பன் . 
"இத எப்ப யூஸ் பண்றது?"
"ம்..சந்தோசம், துக்கம், அழுகை, வெயில், சிரிப்பு,  மழை, உன் காதலி இல்ல நண்பன் காதலிய இன்னொருதவனோடு பார்க்கும் போது, பிடிச்ச அல்லது பிடிக்காத படம் பார்க்கும்போது, இப்படி எதாவுது ஒரு சந்தர்பத்துல யூஸ் பண்ணு" இந்த வார்த்தைக்கு இவ்வளவு பெரிய ஒரு விளக்கம் தேவையற்றது.
"சரி இன்னிக்கு நான் ட்ரை பண்றேன்".
 "கங்கராட்ஸ்டா " சொல்லி பரிட்சைக்கு அனுப்புவது போல அனுப்பி வைத்தான்.
"பிடிக்காத வார்த்தையாக இருந்தாலும், இந்த வார்த்தையை ஒரு முறையாவது திட்டுவதற்கு யூஸ் பண்ணியாகவேண்டும்" எனக்குள் சொல்லிக் கொண்டே கிளம்பினேன். 
என் நேரம் இன்று எந்த ஆட்டோகாரனும் வேகமா வண்டி ஓட்டுல, தண்ணி லாரி எதிர்க்க வரல, ட்ராபிக் சிக்னல் கூட பச்சையாக இருந்தது.
ஹோட்டலில் ஆர்டர் செய்தவுடன் தோசை வந்தது, தியேட்டர்ல கூட்டம் இல்ல டிக்கெட் ஈஸியா கிடச்சிது, நான் பார்த்த தமிழ் படம் வேற நல்லா இருந்தது. 
கோவிலில் ஒரு பிச்சைக்காரன் கூட இல்லை, கூட்டம் இல்லை ,இன்று கடவுள் கூட தட்சனை கேக்கவில்லை.  
இந்திய--ஆஸ்திரேலியா மேட்ச் ஆரம்பித்தது, இந்திய ஜெயித்தாலும் தோற்றாலும் ஆஸ்திரேலியாவை திட்ட வேண்டும் என முடிவு செய்தேன். என் நேரம் பாருங்க மழை காரணமாக மேட்ச் நிறுத்தபட்டது. ம்மழையை திட்ட மனம் இல்லை
"மச்சான் என்னடா? என்ன ஆச்சி?" நண்பன். 
"இல்லடா இன்னிக்கு திட்டுறதுக்கு நேரம் வரல, சரி நாளைக்கு ட்ரை பண்றேன்"
"f**k மேன்…. உனக்கு சொல்றதலாம் வேஸ்ட். இந்த வார்த்தைய சொல்லறதுக்கு நேரம் காலம் பார்த்துட்டா இருப்பான்? போடா.... ங்கொ**… "
"சே! இந்த தடவ தமிழாக்கம் பண்ணி திட்டிடான். இதல்லாம் ஒரு பிரச்சனைன்னு இவன்ட பேசி திட்டு வாங்கிட்டு இருக்கனே?" எனக்குளே சொல்லிக் கொண்டு என்னை நானே திட்டிக் கொண்டேன் "f**K".
துணுக்கு: இது வரை இந்தக் கதையில் “f**k” என்ற வார்த்தை 27 முறை உபயோகப்படுத்தி உள்ளது.  
“இதெல்லாம் ஒரு துணுக்கா?/கதையா?,  "f**kநீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது.    

Saturday, February 19, 2011

நடுநிசி

காலையில் 
விட்டுச் சென்ற
மிச்சமாய் 
நீ கட்டிலில்!
உன் வளைவு நெளிவுகளை 
கடந்து சென்ற
காற்றாய் 
நான் கலக்கத்தில்!


பாதம் முதல்! 
தலை வரை! 
முத்தத்தால்
என்னை அளவிடு! 
கழுத்து பகுதியில் 
இளைப்பாறி
கொஞ்சம் கடித்துவிடு!

உன் உடலில்   
தெளிவாய்த் தெரிகிறது 
நேற்று நான் துறந்த 
சிறு முடிகள்!
என் கைரேகைகளின் 
முகவரிகள்!      

நிலா ஒளியில் 
குளிர்க்காயுது பறவையின் 
கூடு!
கார் இரவில் 
நடுங்குது உயிர் என்னோடு நீ
கூடு!

"உன்னை விடுத்து!
என்னை உடுத்து!"
அழைக்கிறாய் நீ!
என்னை
துறக்கிறேன் நான்!

துறவு பூணுவது 
சுகமென அறிகிறேன்!
உன்னோடு சேர்ந்து 
துறவியாய்ப் போகிறேன்!

என்
கண்கள் 
மட்டுமல்ல 
கனவுகளும் 
உன்னக்குள்ளே 
புதைந்துப் போகிறது!

மேலும் கீழுமாக 
மாறுகிறோம்!
"நான் கீழும் 
நீ மேலும்"
எனத் தீர்ப்பெலுதுகிறோம்! 

உறங்கும் வரை
என்னோடு உரையாடுவாய்!
உறங்கிய பின்னும் 
என்னோடு உறவாடுவாய்!
  
களைந்துப் போனாலும் 
களைத்துப் போகமாட்டாய்! 
விலகிப் போனாலும்
விரல் தொடும் தூரத்தில் கிடப்பாய்!  

விடிந்ததும் 
உன்னை விலக்கி
எழுந்துப் போகிறேன்!                 
கட்டிலில்
நீ களைந்துக் கிடப்பதை
கண்டுகொள்ளாமல் போகிறேன்!

ஆம் 
தினமும் காலையில்
நான்  போர்வையை
மடித்து வைப்பதில்லை!
மறந்துப் போகிறேன்!